வெளிநாட்டு ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது..! சோதனையில் சிக்கிய இலட்சங்கள்




வெளிநாட்டு ஆசை காட்டி வாக்குறுதியளித்து பணம் மோசடி செய்த பெண்ணொருவரை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(26.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து, ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக சந்தேக நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய, நேற்று(26) காலை அலுபொம்மை பொலிஸ் பிரிவில் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை - பனதுராவைச் சேர்ந்த 41 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.