மாணவர்களை டெங்கு தொற்றிலிருந்து காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசேட டெங்கு புகை விசிறி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

 

 







வரதன்


 மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது டெங்கு மரணம் ஏற்பட்டதை அடுத்து அதிகமாக டெங்கு நோயாளிகள் இனங்காணப்படும்  பிரதேச செயலகப் பிரிவில்  விசேட டெங்கு முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் முன்னெடுப்பு

 இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரப்புற தேசிய பாடசாலைகள் அதிகம் மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு நேற்று மாலை மாவட்ட மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை  டெங்கு தொற்றிலிருந்து காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசேட டெங்கு புகை விசிறி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

 மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ உதயகுமார் வழிகாட்டலில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலையில் பொது சுகாதார பரிசோதகர் எஸ் முருகதாஸின் மேற்பார்வையின் கீழ் இந்த டெங்கு புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

 பாடசாலையின் வடிகான்கள் மலசல கூடம் வகுப்பறைகள் பிரதான மண்டபம் சிற்றுண்டி சாலை போன்ற முக்கிய இடங்களில் இந்த டெங்கு புகை விசிறும் செயற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டது