அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா











சாய்ந்தமருதில் இயங்கி வரும் பிரபல கல்வி நிறுவனமான கைட் நிறுவனத்தினால் ( Guide Institute- Sainthamaruthu) கடந்த மே மாதம் நடைபெற்ற முதலாம் தவணைப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள் , சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று (21..06.2026) KL . Faiz சேர் ( Director of Guide institute) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ILA. மஜீட் சேர் மற்றும் மஹ்மூத் 
மகளிர் கல்லூரியின் உதவி அதிபர்  MB. முஜீன் சேர் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் இக்கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முதன்மைச் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.