வரதன்
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்
கீழ் பின்தங்கிய பிரதேச மக்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் கொண்டுவரும்
நலத்திட்டங்களை உரியவர்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கும் வகையில்
அப்பகுதிகளில் கடமையாற்றும்
அரச ஊழியர்களின் சேவையினை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில்
20
லட்சம் ரூபா செலவில் புதிதாக புனரமைக்கப்பட்ட ஆயித்தியமலை மலை வடக்கு
பிரதேச கிராம பிரிவுக்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வு நேற்று பிற்பகல்
மன் முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்யா நந்தி நமசிவாயம் தலைமையில்
இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்
புதிய கட்டடத் தொகுதியில்
அரச ஊழியர்களுக்கான சகல வசதிகளிலும் கூடிய கடமையாற்றும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன
ஆயத்தியமலை
போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி இப்பகுதிக்கான பிரதேச செயலக திட்டமிடல்
அதிகாரி கிராம சேவை உத்தியோஸ்தர்கள் பொதுமக்கள் என பலர் இந்த திறப்பு விழா
நிகழ்வில் கலந்துகொண்டனர்.


.jpeg)

.jpeg)







