வரதன்
சுகாதார அமைச்சினால் தேசிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் பிரதேச செயலகங்கள் மற்றும் சுகாதார தரப்பினர் ஊடாக தொடர்ச்சியாக டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு எதிரான செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது
இதன் ஒரு கட்டமாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பிரதேச செயலக பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் அதிக டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்ட கல்லடி வேலூர் பகுதியில் பாரிய டெங்கு பரிசோதனை செயற்திட்டம் பிரதேச செயலாளர் திருமதி V.சிவப்பிரியா ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் A.S. அருள் ராஜ் தலைமையில் இடம்பெற்றது இதன்போது அப்பகுதியில் உள்ள வடிகான்கள் வீடுகள் வெற்று காணிகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் வீதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மாநகர சபையின் ஊழியர்களால் உடனடியாக அகற்றப்பட்டது
இன்றைய இந்த விசேட டெங்கு பரிசோதனை தேசிய செயற்திட்டத்திற்கு மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர்R. முரளீஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி E. உதயகுமார் மாநகர சபை ஆணையாளர் எஸ் தனஜெயன் மற்றும் பிரதேச பிரஜா சக்தியை உறுப்பினர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
.jpeg)




.jpeg)






