கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வசந்த மண்டப பூசைகள் என்பன இடம்பெற்று பஞ்சமுக விநாயகர் தேரில் அமர்ந்து பல பக்த அடியார்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர்.
ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான தேரோட்டம் வாழைச்சேனை கல்குடா வீதி, விபுலானந்தர் வீதி, சந்தை பிரதான வீதி மற்றும் கல்குடா வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
கடந்த புதன்கிழமை மாம்பழத்திருவிழா, சனிக்கிழமை வேட்டைத்திருவிழா இடம்பெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்திருவிழா இடம்பெற்ற நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை பாசிக்குடா வங்கக் கடலில் தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.
இதன்போது காவடியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உட்பட்ட கலை நிகழ்வுகள் சகிதம் பல பக்தர்கள் புடைசூழ வடம் பிடித்து சென்றனர்
உற்சவ பூசைகள் யாவும் மஹோற்சவ கால பிரதம குரு ஆகமபிரிவினா, பிரதிஸ்டா சாகரம் 'வாமதேவ சிவாச்சாரியார், ஆர்ச்சார்ய பூசணம் சிவஸ்ரீ சபா பாஸ்கரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றைக் கொண்ட ஆலமாகும். இங்குள்ள மூல விக்கிரகம் கைலாய மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் உருவாக்கப்பட்ட ஆலமாகும்.
ந.குகதர்சன்

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)






