UTHAYA KANTH
மட்டக்களப்பு விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையம் மற்றும் மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் "யோகா மனித குலத்தை இணைக்கும் உலகளாவிய பாதை" எனும் தொனிப்பொருளில் சர்வதேச யோகாதின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை 21.06.2026 கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் மோகனசுந்தரம் அகிலன் மற்றும் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சரவணமுத்து பிறேமானந்தன், கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் சபாபதிப்பிள்ளை தயாபரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் யோகா பயிற்றுவிப்பாளர் எஸ்.சிறிதரனின் ஒழுங்கமைப்பிலும், பயிற்றுவிப்பாளர் அழகுதுரை ஜெயகரனின் வழிநடத்தலிலும் நூற்றுக்கணக்கானோர் யோகா பயிற்சி விழிப்புணர்வு நிகழ்வில் ஈடுபட்டனர்.
இதன் போது யோகாசனம் தொடர்பான விழிப்புணர்வு உரைகள் அதிதிகளினால் நிகழ்த்தப்பட்டதுடன், யோகா தொடர்பான விழிப்புணர்வு அளிக்கை காட்சிப்படுத்தல்கள் மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டதனைத் தொடந்து யோகா கலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அதிதிகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)






