மட்டக்களப்பு மாவட்ட எல்லே சுற்று போட்டி - செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் சம்பியன்.





36 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட  இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு பெவர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட  இளைஞர் சேவை அதிகாரி மாணிக்கக்போடி சசிக்குமார்  தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் 05 ஆண்கள் அணிகளுயும் 04 மகளீர் அணிகளும் கலந்துகொண்டன.

மகளீர் இறுதிப்போட்டியில் ஏறாவூர்ப்பற்று சார்பில் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் கோறளைப்பற்று தெற்கு சார்பில் முறக்கொட்டாஞ்சேனை  இளைஞர் கழகங்களிடையே நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக  அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வழங்கப்பட்ட 20 பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெத்தாடிய முறக்கொட்டாஞ்சேனை  இளைஞர் கழக  அணி எதுவித ஓட்டங்களையும் பெறவில்லை.  

செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2026ம் ஆண்டின் சம்பியனானது.


 

  ந.குகதர்சன்