மட்டக்களப்பு, திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையா ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு.













வரதன்



 கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயங்களில் ஒன்றான மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புணராவர்த்தன அஷ்டபந்தன நவ குண்ட  மகா கும்பாபிஷேக நிகழ்வு இன்று காலை

 சுப முகூர்த்த வேளையில் ஆலயத்தின் பிரதிஷ்ட பிரதம குரு சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்த மூர்த்தி குருக்கள் தலைமையில் அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது

 கடந்த 20 திகதி  இவ்வாலயத்தின் கும்பாபிஷேக கிரிகைகள் ஆரம்பமாகியதுடன் 24ஆம் திகதி என்னைக் காப்பு சாத்தும்  நிகழ்வு இடம் பெற்றது

 இன்று அதிகாலை புண்ணியாக வாசனம்  யாக பூஜை விசேட பூஜை வேத தோத்திர பாராயணம் இடம்பெற்று அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் எம்பெருமானின் கும்பாபிஷேகம் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தி பூர்வமாக சிறப்பாக இடம் பெற்றது

 ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து  சிறப்பித்தனர்