முன்னாள் நீதி அமைச்சர் கோடிக்கணக்கான நிதிகளை பெற்றுக்கொண்டு போதைப் பொருள் விற்பனையாளர்களை காப்பாற்ற உதவி புரிந்துள்ளார் - அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் -

 

 

 

 


வரதன்


 

முன்னாள் நீதி அமைச்சர் கோடிக்கணக்கான நிதிகளை  பெற்றுக்கொண்டு போதைப் பொருள் விற்பனையாளர்களை காப்பாற்ற உதவி புரிந்துள்ளார்- அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் 

முன்னாள் ஜனாதிபதிகள் புலனாய்வு பிரதானி உட்பட தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள் எமது வாக்குறுதிகளில் ஒன்றான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

 இதற்கு பின்னால் அரசியல் மறைந்துள்ளது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் தற்போது பல உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது முன்னாள் நீதி அமைச்சரின் மகனும் இதனுடன் போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு பட்டவை தற்போது தெரிய வந்துள்ளது

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பு பட்டவர்களும் இதனுடன் தொடர்புப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 போதைப்  பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என

மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்