BATTI VARATHAN & SIVAKUMAR
கிழக்கு மாகாணத்தில் இயற்கை அனுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான
நஷ்டஈடு தொகை தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகிறது
இதேவேளை
மட்டக்களப்பு மாவட்டத்திலும் டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட தெரிவு
செய்யப்பட்ட மீனவ பயனாளிகளுக்கான நஷ்ட ஈடு தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு
இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம
அதிதியாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டு தெரிவு
செய்யப்பட்ட 35 பயனாளிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான நஷ்ட ஈடு
தொகையினை வழங்கி வைத்தார்
இதில் நான்கு பயனாளிகளுக்கு 4.5 லட்ச ரூபாய் வீதமும் 31 பயனாளிகளுக்கு
இரண்டரை லட்சம் ரூபாய் வீதமும் நஷ்ட ஈடு தொகை இங்கு வழங்கி வைக்கப்பட்டது
மாவட்ட
அரசாங்க அதிபர் j s. அருள்ராஜ் திணைக்கள உயர் அதிகாரிகள் பிரதேச
செயலாளர்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகள் பயனாளிகள் என பலரும் இவை நிகழ்வில்
கலந்து கொண்டனர்















































