தென்
அமெரிக்க நாடான வெனிசுலாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த
நிலநடுக்கத்தால், ஆயிரக்கணக்கானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள
நிலையில், கர்ப்பிணி ஒருவர் இடிபாடு களுக்கு உள்ளே ஆண் குழந்தையை பிரசவித்த
சம்பவம் நடந்துள்ளது.
தாயும் குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே
நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட வெனிசுலா வின் லா குவைரா
மாகாணத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணி
நேற்றும் தொடர்ந்தது.
இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், 68,900 பேரை காணவில்லை.
இதுவரை 17 விமானங்களில் 1,600-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் வெனிசுலா வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.