காத்தான்குடி கடற்கரை வீதியில் புடவைக் கடை தீக்கிரை.

 



காத்தான்குடி கடற்கரை வீதியில் நேற்று (20.6.2026) மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கடை உரிமையாளர் மதியம் சாப்பாட்டுக்காகக் கடையை மூடிவிட்டு அவரது வீட்டுக்குச் சென்ற பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இப்றாகீம் என்பவருக்குச் சொந்தமான இந்த புடவைக்கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதன்போது காத்தான்குடி நகர சபை தீயணைக்கும் வாகனம், மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் வாகனம் ஆகியன ஸ்தலத்திற்கு விரைந்து காத்தான்குடி காவல்துறையினர், காத்தான்குடி நகர சபை ஊழியர்கள், காத்தான்குடி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு ஏனைய கடைகள் மற்றும் வீடுகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

குறித்த இடத்திற்கு வேகமாக விரைந்த காத்தான்குடி காவல் நிலையப் பொறுப்பதிகாரி அலவக்கோன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் மின் ஒழுக்காக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.