தோணியில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 


புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் தோணியில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மங்களபுர எனும் ஏரியில், மாணவர்கள் 5 பேர் தாமரை பூ பறிப்பதற்காகத் தோணியில் சென்ற வேளையில், குறித்த தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

அவர்களில் ஒரு மாணவர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாகவும், நீரில் மூழ்கிய ஏனைய 4 மாணவர்களும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நால்வரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.