மட்டக்களப்பு – திராய்மடுவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை கருமாரம்பம் சுப வேளையில் பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியது .
2026.07.01 நாளை புதன் கிழமை அதிகாலை 05.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெற உள்ளது
02.07.2026 வியாழக்கிழமை அன்று, திருகோண நட்சத்திரமும் சதுர்த்தி திதியும் சித்தயோகமும் கூடிய சுப வேளையில் காலை 09.20 மணி முதல் 10.30 மணி வரை ம கா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேக பெருவிழாவில் சைவ பக்த அடியார்கள் அனைவரும் குடும்பசமேதராகக் கலந்துகொண்டு, கிரியைகளைக் கண் குளிரத் தரிசித்து, அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்மனின் திருவருளைப் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)




