2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான ஆட்சேர்ப்புக்கானபோட்டிப் பரீட்சை-ஜூன் 7 ஆம் திகதி

 

 


 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான ஆட்சேர்ப்புக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்தப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சையானது கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி நடாத்துவதற்கு முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.