ஒரு தனிநபர் மாதம் 17,700 ரூபாய் வருமானத்தைக் கொண்டு இலங்கையில் உயிர்வாழமுடியுமா ?

 


 ஒரு தனிநபர் மாதம் 17,700 ரூபாய் வருமானத்தைக் கொண்டு உயிர்வாழ முடியும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள கணிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தினார்.

தற்போதைய வாழ்வாதாரச் செலவுகள் மற்றும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் இத்தொகை போதுமானதல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.