2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்விப்பீடங்களின் பௌதீக வள அபிவிருத்திக்காக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகூடிய தொகையாக 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் திருத்த வேலைகளுக்காக மாத்திரம் தனியாக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் மேல் மாகாண தேசிய பாடசாலை அதிபர்களைத் தெளிவுபடுத்துதல் மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விபரங்களை வெளியிட்டார்.





