வரதன்
12 கோடி நிதிகளை கடந்த ஆட்சியாளர்கள் போதைப்பொருள் வியாபாரிகளை காப்பாற்றுவதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டமை தற்போது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது குற்றவாளிகள் எவரும் தப்பி விட முடியாது - பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
கடந்த கால ஆட்சியாளர்கள் போதைப்பொருள் வியாபாரிகளை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்போது தெரியவந்துள்ளது
இந்த நாட்டை சீரழிப்பதற்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தற்போது தெரிய வந்துள்ளது இந்த நாட்டை நேசிப்பவர்கள் யார் சீரழித்தவர்கள் யார் என்ற உண்மை என்ற உண்மை மக்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது
இந்த சம்பவத்திற்கு பின்னால் எதிர்க்கட்சித் தலைவரின் கட்சி அமைப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதுடன் இவர்களும் இந்த நாட்டை சீரழித்தவர்களுடன் இணைந்துள்ளார் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது
கைது செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீதி வழங்கப்படும் தண்டனைகளில் இருந்து எவரும் தப்பி விட முடியாது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அதருடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்





