தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற மிஸ்டர் யுனிவர்ஸ் (Mr. Universe 2026) சர்வதேச உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக 12 பேர் கொண்ட இலங்கை உடற்கட்டமைப்பு அணி நேற்று (25) நாட்டை விட்டு புறப்பட்டது.
இப்போட்டி ஜூன் 27 முதல் 29 வரை 40 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை அணியினரை ஊக்குவித்து, உத்தியோகபூர்வமாக வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பணிப்பாளர் நாயகம் வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், சர்வதேச அரங்கில் சிறந்த வெற்றிகளைப் பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இலங்கை அணி விபரம்:
முகாமையாளர்: நிஹால் வீரதுங்க
பயிற்றுவிப்பாளர்: துலாஞ்சன ஏகநாயக்க
வீரர்கள்: ஒய்.ஜி. அமில, செனால் சந்தரு, பி.ஏ.பி. மதுஷான், ரங்க சில்வா,
சூரியகாந்த், கே.பி.எஃப்.பி. பெத்மகே, டபிள்யூ.ஆர். காவிந்த, நிஷாந்த
தனஞ்சய, பிரையன் மலிக், அனோஜ் அலோசியஸ், ஜி.பி.என். டயஸ்.
இலங்கைத் தாய்க்கு பெருமை சேர்க்க புறப்பட்டுச் சென்றுள்ள எமது வீரர்களுக்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் ஆகியன தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றன!





