கிழக்கு மாகாண ஆளுநர் Hon. Prof. Jeyantha Lal Ratnasekera அவர்களுக்கும் மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும் உள சமூக ஆதரவு. நிழல் அமைப்பின் தலைவியுமான தேவரஞ்சனி பிரான்சிஸ் தலைமையிலான உள சமூக குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் (11.05.2026)ஆளுநரின் உத்தியோகபூர்வ அலுவலகம் திருகோணமலையில் இடம்பெற்றது
இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் உள சமுக பிரச்சனைகளும் அதனால் தமது உள சமூக குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப் பட்டதுடன் முக்கியமான 7 கோரிக்கைகளும் உள சமூக குழுவினரால் முன்வைக்கப்பட்டது.
எமது கோரிக்கைகள் கௌரவ ஆளுநரினால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் உள சமூக செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆலோசனை வழிகாட்டுதல்களும் கௌரவ ஆளுநர் அவர்களினால் கூறப்பட்டு தொடர்ந்தும் எமது சேவைக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
கலந்துரையாடலை தொடர்ந்து கௌரவ ஆளுநர் அவர்கள் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் உள சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆற்றி வரும் சேவையை பாராட்டி மேற்படி அமைப்பின் தலைவி தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களினால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
.jpeg)

.jpeg)

.jpeg)





