முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சி திட்ட கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.






வரதன் 

 ஜனாதிபதி மட்டக்களப்பு  மாவட்டத்திற்கான அதிகார பூர்வ விஜயத்தின் ஒரு கட்டமாக
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம் எனும்  திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை அடுத்து 

"முழு நாடும் ஒன்றாக"   தேசிய செயல்திட்ட நிகழ்வு
 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் தேசிய நிகழ்வாக போதைப்பொருளுக்கு எதிரான  தேசிய செயல் திட்ட நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்  இடம்பெற்றது

கிழக்கு மாகாணத்தின் பிரதான இந்த போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் விழிப்புணர்வு போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் சத்திய பிரமாண நிகழ்வும் கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக பணியாற்றிய 52 போலீசார் இதன்போது ஜனாதிபதியினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

 இந்நிகழ்விற்கு
மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேர அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு- எம் எல் ஏ எம் கிஸ்புல்லா அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆதம்பாவா மற்றும் போலீஸ்மா அதிபர் மாவட்ட அரசாங்க அதிபர் S. அருள்ராஜ்

 கிழக்கு மாகாண சபையின் செயலாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரச  திணைக் களங்களின் உயர் அதிகாரிகள்  பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அரச ஊழியர்கள் பிரஜா சக்தி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்