மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 34ஆவது ஆண்டு நிறைவு விழா- 2026.05.16

 



 

 





























































தரிசனம் விழிப்புலனற்றோர்  பாடசாலையின் 34ஆவது ஆண்டு நிறைவு விழா உப தலைவர் மோகராஜா ஜதீஸ்    தலைமையில்  இன்றைய தினம் 2026.05.16   தரிசனம் பிரதான மண்டபத்தில்   இடம் பெற்றது .

 நிகழ்வுக்கு  பிரதம  விருந்தினராக கிழக்கு மாகாண  சமூகசேவைத் திணைக்கள பணிப்பாளர் சுப்பிரமணியம் கரன் கலந்து சிறப்பித்தார். 

   கௌரவ விருந்தினராக ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி டிலக்ஷினி சசிதரன் கலந்து கொண்டார் .

 
சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்   இளையதம்பி சிவலிங்கம்,
 மட்டக்களப்பு 'உதவும் கரங்கள்' அமைப்பின் தலைவரும்    மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான   ச. ஜெயராஜா மற்றும்  ஓய்வு நிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் ஆகியோர் பங்கேற்று இருந்தனர் .

 அழைப்பு விருந்தினராக   மட்டக்களப்பு சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட  ஓய்வு நிலை   சமூக சேவை உத்தியோகத்தர் S. அருள் மொழி நிகழ்வில் கலந்து கொண்டார் .

 
பாடசாலையின் 34ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு 
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பேராளர்கள் முன்னிலையில், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டித் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். விழாவுக்கு வருகை தந்திருந்த விருந்தினர்கள் மாணவர்களின் இந்தச் சிறப்பான ஏற்பாட்டினைப் பாராட்டி, விழாவை மேலும் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

.நிகழ்வின்  போது தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் ,கவிதை,பாடல்,  நடனம் ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.

அதிதிகளாக பங்கேற்ற அனைவருக்கும் தரிசனம் விழிப்புலனற்றோர்  பாடசாலை சமூகத்தால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் . 

 விழாவிற்கு மாணவர்களின் பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்