மட்டக்களப்பு புதிய பொது நூலகக் கட்டடத்தை ஜனாதிபதி இன்று (மே 20) திறந்து வைத்தார் .

 


 



 







 

 









    SIVAKUMAR-CHIEF EDITOR


மட்டக்களப்பு  மாநகர சபையின் பராமரிப்பில், மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட மூன்று மாடி புதிய பொது நூலகக் கட்டடத்தை ஜனாதிபதி இன்று (மே 20) திறந்து வைத்தார் .
அதை தொடர்ந்து 
    மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (Old District Secretariat Auditorium) நடைபெற்றது  மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.

    போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு: மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் (Weber Stadium) நடைபெறும் “ரடம எகட” (நாடே ஒன்றாக) போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திலும் அவர் கலந்துகொள்கிறார்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. ஸ்ரீநேசன், எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் எம்பி எம். ஏ. சுமந்திரன் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர் .