மட்டக்களப்பு தமிழ் சங்கம், கதிரவன் கலைக்கழகம், ஸ்பாண்ட்(SPAND) அமைப்பு இணைந்து. "தழும்பேறிய நிலம்". "எனது மாயச் சிறகுகள்" எனும் கவிமகள் ஜெயவதியின் இரு நூல்களை நாளைய தினம்(17) மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் வெளியிட உள்ளனர். சைவப் புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை பிரதியை உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் திரு. சதாசிவம் ஜெயராஜ் அவர்கள் பெற்றுக் கொள்ள உள்ளார். இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக பேராசிரியர்.பு லோரன்ஸ் பாரதி கென்னடி. சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன பனிப்பாளர்,, மற்றும் டாக்டர் சுகுணன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர்,திரு செல்வரத்தினம் ஜெயபாலன் உயர்தொழில்நுட்ப கல்லூரி மட்டக்களப்பு,திரு சிவானந்தம் ஸ்ரீதரன் வலய கல்வி பணிப்பாளர் கழுவாஞ்சிகுடி,, திரு சூ. பார்த்திபன் உதவி பிரதேச செயலாளர் பட்டிப்பளை, திரு கணபதி ப்பிள்ளை கருணாகரன் ஓய்வு நிலை அரசாங்க அதிபர், ஆகியோருடன் கௌரவ, சிறப்பு விருந்தினர்களாக பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.





