இலங்கை
இராமகிருஷ்ண மிஷனில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக
பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ,
ஓய்வுபெற்று இறுதி ஆன்மீக தவவாழ்வை மேற்கொள்ளுமுகமாக இந்தியா
செல்லவுள்ளார்.
இந்தியா
செல்லும் முன்பு இன்று மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனுக்கு வருகை தந்த
சுவாமிக்கு நாளை மறுநாள் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகத்தான பிரியாவிடை
நிகழ்வு மட்டக்களப்பு ஆச்சிரம பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் நடைபெற உள்ளது.
மட்டக்களப்பு
இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
அந்நிறுவனத்தினனல் மகத்தான ஜீவசேவை புரிந்த மகராஜ்ஜின் பிரிவு உபசார விழா
நடைபெறவுள்ளது.
1986 ஆம்
ஆண்டு இராமகிருஷ்ண மிஷனின் இலங்கை கிளைக்கு மாற்றம் பெற்று வந்த சுவாமி
ராஜேஸ்வரானந்தஜி மகாராஜ் அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக கல்வி, ஆன்மிகம்
மற்றும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்துள்ளார்.
குறிப்பாக
ஏழை மக்களின் முன்னேற்றம், இளைஞர் வழிகாட்டல் மற்றும் ஆன்மிக
வளர்ச்சிக்காக tireless-ஆக பணியாற்றிய அவர், மக்களிடையே பெரும் மதிப்பையும்
மரியாதையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
( வி.ரி. சகாதேவராஜா)







