அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள்: பட்டிருப்பு கல்வி வலய மட்ட நிகழ்வுகள் களுதாவளை மகாவித்தியாலயத்தில் வெகு விமரிசையாகப்இடம் பெற்றது .

 







SIVAKUMAR.


அகில இலங்கை தமிழ் மொழி தினத்தை (2026) முன்னிட்டு, பட்டிருப்பு கல்வி வலய மட்டத்திலான போட்டிகள் மட்/பட்/ களுதாவளை மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) மிகவும் எழுச்சியுடனும் சிறப்புடனும் நடத்தப்பட்டன.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. சிவானந்தம் சிறிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மாணவர்களின் தமிழ் மொழித் திறன்களையும் கலைசார் ஆற்றல்களையும் வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் திறம்பட ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. சி. மனோகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது உரையில், தமிழ் மொழியின் தொன்மை, அதன் தனிச்சிறப்பு மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் மொழியறிவை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்துத் தெளிவுபடுத்தியதோடு, போட்டிகளில் பங்கேற்ற மாணவச் செல்வங்களையும் பாராட்டி வாழ்த்தினார்.

வலயத்தின் பல பாடசாலைகளிலிருந்தும் வருகை தந்திருந்த அதிபர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரது பங்களிப்போடு, தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இந்த வலய மட்டப் போட்டிகள் மிகவும் வெற்றிகரமாக நிறைவுற்றன.