மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று (30) அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து

   








 

 வரதன்  

 

மட்டக்களப்பு தலைமையக போலீஸ் பிரிவுக்குட்பட்ட புகை இறக வீதி சந்தியில் ​வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட பிராந்தியவாசிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்

​தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

 அதிகாலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் பெரும் உயிர்ச்சேதங்கள் எதுவும் தவிர்க்கப்பட்டுள்ளன.
​மின்சார ஒழுக்கு  காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

 விபத்தினால் ஏற்பட்டுள்ள சொத்து விபரங்கள் மற்றும் சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை.
​இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்