மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கான பாராட்டு விழா-2026.05.26

 














 

 















 
















மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் அண்மையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற (18) மாணவர்களைப் பாராட்டும் விழாவும், புதிய மாணவ தலைவர்களுக்கான இலச்சினை அணிவிக்கும்  சிறப்பு விழாவும் இன்று (26.05.2026) முற்பகல் 9.00 மணியளவில் பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​"முயற்சிப்போம் வெற்றி பெறுவோம்" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. சு. நந்தகோபால் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  நுண்  திறன் வகுப்பறை மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான குடிநீர் வசதி நீர் தொட்டி S.சுதர்சன்  ஆரம்பித்து வைத்தார்.

​இவ்விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. T. ரவி அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிப் கல்விப் பணிப்பாளர் திருமதி. N. மகேந்திரகுமார் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக மண்முனை பற்றுக் கோட்டக் கல்வி அதிகாரி திரு. S. தில்லைநாதன் மற்றும் பாடசாலையின் EPSI இணைப்பாளர் திருமதி. R. முருகதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

​மேலும், இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அயற் பாடசாலைகளின் அதிபர்கள், வில்வகலா விளையாட்டுக் கழகத் தலைவர் திரு. S. பிரதீபநாதன், "நட்பிற்கு உயிர் கொடுப்போம்" சங்கத்தின் தலைவர் திரு. S. சுதர்சன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் திரு. S. கணேசமூர்த்தி உள்ளிட்ட சமூகப் பெரியார்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

​பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு இதன்போது பாராட்டுக்களும் கௌரவங்களும் வழங்கப்பட்டதோடு, புதிய மாணவ தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ இலச்சினைகளும் அணிவிக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.