மட்டக்களப்பு - கல்லடி உப்போடை, விபுலானந்த வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று (20) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
கடந்த சனிக்கிழமை (16.05.2025) மாலை வாஸ்து சாந்தியுடன், சுப முகூர்த்த வேளையில் ஆரம்பமான இந்த வருடாந்த அலங்கார உற்சவம் தொடர்ந்து ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. உற்சவ காலங்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் இடம்பெற்றன.
ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று கல்லடி உப்போடை நாகதம்பிரான் ஆலய தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் நிறைவுற்றதும், ஆலயத்தில் திருப்பொன்னூஞ்சல் வைபவமும், அதனைத் தொடர்ந்து பகல் அன்னதானமும் இடம்பெறவுள்ளன. அத்துடன், நாளை மறுதினம் (22.05.2025) வைரவர் பூஜையுடன் உற்சவ நிகழ்வுகள் நிறைவுபெறவுள்ளன.
ஆலயத்தின் திருவிழா கால பூஜை வழிபாடுகள் யாவும் பிரதமகுரு சிவஸ்ரீ சி. குகநாத ஐயா தலைமையில் பக்திப்பூர்வமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுக்கு முன்னதாக பஜனை மற்றும் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
இதன்போது, அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள கல்லடி உப்போடை விபுலானந்த வீதியைச் சேர்ந்த மாணவன் மீனுஜன், பொதுமக்களினால் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த வருடாந்த அலங்கார உற்சவ இறுதி நிகழ்வுகளில் பக்தி பூர்வமாகப் பங்கேற்று, அருள்மிகு ஸ்ரீ முத்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய பரிபாலன சபையினர் பக்த அடியார்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
SIVAKUMAR- CHIEF EDITOR
மட்டக்களப்பு - கல்லடி உப்போடை, விபுலானந்த வீதியில் அமைந்துள்ள அருள்மிகு
ஸ்ரீ முத்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின்
தீர்த்தோற்சவம் இன்று (20) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
கடந்த
சனிக்கிழமை (16.05.2025) மாலை வாஸ்து சாந்தியுடன், சுப முகூர்த்த வேளையில்
ஆரம்பமான இந்த வருடாந்த அலங்கார உற்சவம் தொடர்ந்து ஐந்து நாட்கள் சிறப்பாக
நடைபெற்றது. உற்சவ காலங்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு
சிறப்பு அபிஷேக பூஜைகள் இடம்பெற்றன.
ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று
கல்லடி உப்போடை நாகதம்பிரான் ஆலய தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.
தீர்த்தோற்சவம் நிறைவுற்றதும், ஆலயத்தில் திருப்பொன்னூஞ்சல் வைபவமும்,
அதனைத் தொடர்ந்து பகல் அன்னதானமும் இடம்பெறவுள்ளன. அத்துடன், நாளை மறுதினம்
(22.05.2025) வைரவர் பூஜையுடன் உற்சவ நிகழ்வுகள் நிறைவுபெறவுள்ளன.
ஆலயத்தின் திருவிழா கால பூஜை வழிபாடுகள் யாவும் பிரதமகுரு சிவஸ்ரீ சி. குகநாத ஐயா தலைமையில் பக்திப்பூர்வமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுக்கு முன்னதாக பஜனை மற்றும் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
இதன்போது,
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3A
சித்திகளைப் பெற்று, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள கல்லடி உப்போடை
விபுலானந்த வீதியைச் சேர்ந்த மாணவன் மீனுஜன், பொதுமக்களினால் பொன்னாடை
போர்த்தி, நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த வருடாந்த
அலங்கார உற்சவ இறுதி நிகழ்வுகளில் பக்தி பூர்வமாகப் பங்கேற்று, அருள்மிகு
ஸ்ரீ முத்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய
பரிபாலன சபையினர் பக்த அடியார்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.



















