SIVAKUMAR-CHIEF EDITOR
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், கதிரவன் கலைக்கழகம் மற்றும் SPAND அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய, கவிமகள் ஜெயவதியின் "தழும்பேறிய நிலம்” மற்றும் “எனது மாயச் சிறகுகள்" ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 17.05.2026 அன்று மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல முக்கிய ஆளுமைகள் முதன்மை அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
பிரதம விருந்துனர்கள்: பேராசிரியர் புலோரன்ஸ் பாரதி கென்னடி (பணிப்பாளர், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனம்)
வைத்தியர் சுகுணன் (பணிப்பாளர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை)
செல்வரத்தினம் ஜெயபாலன் (பணிப்பாளர், மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்லூரி)
சூ.பார்த்திபன் (உதவி பிரதேச செயலாளர், பட்டிப்பளை)
கருணாகரன் (ஓய்வுநிலை அரசாங்க அதிபர்)
இவர்களுடன் கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
நூல் வெளியீடு: விழா மேடையில் நூல்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. நூலின் முதன்மைப் பிரதியை ‘உதவும் கரங்கள்’ அமைப்பின் தலைவர் சதாசிவம் ஜெயராஜ் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் நூலாசிரியரால் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நயவுரையும் சிறப்புரையும்: நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் நூல்களுக்கான நயவுரைகளும், வாழ்த்துச் சிறப்புரைகளும் வழங்கப்பட்டன.
நூலாசிரியர் கௌரவிப்பு: நூலாசிரியர் கவிமகள் ஜெயவதி அவர்களின் இலக்கியப் பணியைப் பாராட்டி, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், கதிரவன் கலைக்கழகம் மற்றும் SPAND அமைப்பு ஆகியன இணைந்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து மடல் வழங்கி உயரிய கௌரவத்தை அளித்தன.
கலைஞர்கள் கௌரவிப்பு: விழாவில் கலை நிகழ்வுகளை அழகாக அரங்கேற்றிய மாணவக் கலைஞர்கள் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், கதிரவன் கலைக்கழகம், SPAND அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





























































































































