மட்டக்களப்பு புளியந்தீவு ரிதம் அமைப்பின் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம்- 2026.05.27








மட்டக்களப்பு புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் (Rhythm Youth Club, Batticaloa) 21 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக, மாபெரும் விசேட இலவச வைத்திய முகாம் ஒன்று  2026.05.27 (புதன்கிழமை)
 காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை    ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கௌரவ மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் (RDHS) அனுசரணையுடனும், நியூ பயணியர் வைத்தியசாலையின் (New Pioneer Hospital) பங்களிப்புடனும் இவ் இலவச  மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாம் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:
இடம், காலம் மற்றும் நேரம்:

    இடம்: ரிதம் சனசமூக நிலைய கட்டடம், வாவிக்கரை வீதி 02, மட்டக்களப்பு.

    திகதி: 2026.05.27 (புதன்கிழமை)

    நேரம்: காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை

வழங்கப்படும் இலவச மருத்துவ சேவைகள்:

இவ்வைத்திய முகாமில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு பின்வரும் மருத்துவ சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன:

    மருத்துவ ஆலோசனைகள் (Medical Advices)

    மருத்துவ பரிசோதனைகள் (Medical Checkups)

    இரத்த அழுத்தப் பரிசோதனை (Blood Pressure)

    நீரிழிவுப் பரிசோதனை (Diabetes)

    பொது மருத்துவ சிகிச்சைகள் (Medical Treatments)

    பல் வைத்திய பரிசோதனை (Dental Checkup)

    கண்பார்வை பரிசோதனை (Eye Checkup)

    புளியந்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிப் பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, முகாமில் கலந்துகொண்டு தமக்கான மருத்துவப் பயன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கப்படுகின்றீர்கள்.