மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில், "உதிரம் கொடுப்போம், உயிரைக் காப்போம்" என்ற உன்னதமான தொனிப்பொருளில் பாரிய இரத்ததான முகாமொன்று சனிக்கிழமை (23) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தின் ஏற்பாட்டிலும், மட்டக்களப்பு மகளிர் அரிமா கழகத்தின் (Lioness Club) அனுசரணையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மட்டக்களப்பு எல்லைவீதி சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் இரத்ததான முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பு வைத்தியர் எம்.எஸ்.எவ்.றுஸ்தா தலைமையிலான தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டு குருதிச் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலையின் அவசரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு நடாத்தப்பட்ட இந்த உன்னதமான சமூகப் பணியில், மட்டக்களப்பு பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தின் உறுப்பினர்கள், இளைஞர்கள் பொதுமக்கள்,மற்றும் நலம் விரும்பிகள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தத் தட்டுப்பாடு என்பது அவசர சிகிச்சையில் இருக்கும் பல உயிர்களைப் பாதிக்கும் ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இத்தகைய சூழலில், பொதுமக்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து குருதிக்கொடை வழங்க முன்வந்த பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தினதும், அதற்குத் துணையாக நின்ற மகளிர் அரிமா கழகத்தினதும் இந்தச் சேவை சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.
தன்னார்வத்துடன் முன்வந்து குருதிக்கொடை வழங்கிய அனைத்து பொதுமக்களுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவக் குழுவினருக்கும் எமது ஊடகம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)




