மட்டக்களப்ப்பில் தனியார் வங்கி ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 


மட்டக்களப்பு, தாண்டவன்வெளி சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் திடீரென பரவிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தீவிரமாக ஈடுபட்டனர். அனைவரின் கூட்டு முயற்சியால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, தற்பொழுது நிலைமை சீரமைக்கப்பட்டுள்ளது.