கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திவிநாயகர் ஆலய புனருத்தாரணம் .

 






















கல்முனை ஆதார வைத்தியசாலையில் சைவசமய ஆகமப்படி உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த ஶ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் தற்போது
புனருத்தாரண வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

ஆலய புனரமைப்பு பணிகளை அண்மையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் சகிதம் சென்று பார்வையிட்டார்.

இவ் ஆலயம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் மனக்குறையை ஒப்புவித்து அருள் மற்றும் நிம்மதி பெறும் இடமாக கணப்படுகின்றது. 

இக் கோயில் இந்து மக்களின் ஒரு சிறப்பான அடையாளமாகவும் கருதப்படுகின்றது.

இவ்வாலயம் அடுத்த வருடம் மகா கும்பாபிஷேகம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.