மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி, 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 




மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி, 7 வயது சிறுவன் ஒருவனால் தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீரமிக்க நடைபயணம் அட்டன் நகரில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணமானது திம்புள்ள பத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளைக் கடந்து அட்டன் நகரை வந்தடைந்த போதே, அட்டன் பொலிஸ் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் இடைநிறுத்தப்பட்டது.
இவ்வாறான அரசியல் அல்லது சமூகப் போராட்ட நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்துவது அப்பட்டமான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் உரிமை மீறலாகும் எனச் சுட்டிக்காட்டியே பொலிஸார் இந்த நடைபயணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.