ஒக்டோபர் மாதத்திற்குள் மேலும் 2,867 புதிய தாதியர் நியமனங்கள் வழங்கப்படும்.

 

 


இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் மேலும் 2,867 புதிய தாதியர் நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விபரத்தை வெளியிட்டார்.