மட்டக்களப்பில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரம்மாண்டமான "கூத்து விழா - 2026"









































SIVAKUMAR


மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாரம்பரிய கலை வடிவங்களை மீள்நிலைப்படுத்தும் நோக்குடன் நடாத்தப்படும் "கூத்து விழா - 2026"  (2026.05.29) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு, பூம்புகாரில் அமைந்துள்ள குளக்கட்டு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மிக விமரிசையாக  நடை பெற்றது 

மட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் திரு ந.தனஞ்ஜெயன் பிரதம அதிதியாகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவன சிரேஸ்ட விரிவுரையாளர் திரு கே.மோகனதாசன் சிறப்பு அதிதியாகவும்   கலந்து சிறப்பித்தனர் .

கௌரவ அதிதிகளாக குளக்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி சாந்தரூப குருக்கள், பிரதம பூசகர் சித்திரவேல் , ஆலய வண்ணக்கர் திரு சி.சிவநேசராஜா மற்றும் பூம்புகார் கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி பிரியா ராஜ்குமார் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் .

அதிதிகள் வருகையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது தொடர்ந்து குளக்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவசிறி சாந்தரூப குருக்களின்  ஆசியுரையும், மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் திரு மூ.சிவானந்தராசாவின் தலைமையுரையும் வரவேற்புரை இடம்  பெற்றது . 

பாரம்பரிய மற்றும் நவீன கூத்து கலைவடிவங்களை தாங்கி, மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் கலைக் குழுவினரால்  கூத்து ஆற்றுகைகள் மேடையேற்றப்பட்டன .

கீலே குறிப்பிடப்பட்ட  கூத்து ஆற்றுகைகள் களமேற்றப்பட்டன .
  

  அளுமையாள் ஔவை – அன்புநெறிக் கலைமன்றம், கல்லடி

    புலிக்கூத்து – வாகரை கூத்து ஆற்றுகை குழுவினர்

    கண்டிராசன் (தென்மோடிக்கூத்து) – திகிலிவட்டை கலைஞர்கள்

    நவீன கூத்து – பாரதி கலாமன்றம், பலாச்சோலை

    வசந்தன்கூத்து – தேற்றாதீவு கலைஞர்கள்

    பப்பிரவாகன் (வடமோடி) – முனைக்காடு கலைஞர்கள்

    நந்தியின் மகிமை (தென்மோடி) – கண்ணகி முத்தமிழ் மன்றம், கன்னன்குடா

    கர்ணணன் வதை – கிருஸ்ணா கலைக்கழகம், புதுக்குடியிருப்பு

    அர்ச்சுனன் பாசுபதம் – திமிலை நளினகலா நாடக மன்றம், திமிலைதீவு.

ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரங்கேற்றப்பட்ட இக் கூத்து ஆற்றுகைகளைக் காண்பதற்காகப் பெருந்திரளான பக்த அடியார்களும், கலைப்பிரியர்களும் வருகை தந்திருந்தனர். நள்ளிரவுத் தாண்டியும் ஆர்வத்துடன் கண்விழித்து, கலைஞர்களின் சிறப்பான திறமைகளை அவர்கள் கண்டு களித்தமை குறிப்பிடத்தக்கது.

  •  தமிழர்களின் தொன்மையான பாரம்பரியக் கலை வடிவங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவும் வேண்டியது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் தலையாய கடமையாகும். அந்த வகையில், அழிந்து வரும் எமது பாரம்பரியக் கூத்துக் கலைகளையும், அதனை உயிர்ப்பிக்கும் கலைஞர்களையும் நெறிப்படுத்துபவர்களையும் உற்சாகப்படுத்திப் பாராட்ட வேண்டியது எமது கடமையாகும்   அந்த வகையில் 

     ஒவ்வொரு கூத்து ஆற்றுகையின் முடிவிலும், அதில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி மிகச் சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டனர்.

      இந்நிகழ்வில் கல்லடி அன்புநெறிக் கலைமன்றத்தினரால் மேடையேற்றப்பட்ட 'ஆளுமையாள் ஔவை' கூத்து ஆற்றுகை, அங்கிருந்த மக்களின் ஏகோபித்த ஆதரவையும் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.

     

நிகழ்வின் இறுதிப் பகுதியில், பட்டிப்பளை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு. S. ருபேஷன் அவர்களின் நெகிழ்ச்சியான நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.