2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் பற்றி முக்கிய அறிவிப்பு .

 


2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குள் வெளிவர வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.   

தேர்வு விடைத்தாள்களின் மதிப்பீடு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும் முடிவுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.