வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த .சகஸ்ரநாம 1008. 108 சங்காபிஷேக பெருவிழா .













வாழைச்சேனை  பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில்  வருடாந்த .சகஸ்ரநாம 1008. 108 சங்காபிஷேக பெருவிழா  ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனை சிறப்பிக்கும் வகையில் பால்குட பவனி ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாற்குட பவனியானது வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை நிகழ்வினை தொடர்ந்து அங்கிருந்து ஆரம்பமானது.

அடியார்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் முகமாக தலையில் பாற்குடங்களை சுமந்தபடி  கல்குடா பிரதான வீதி, பேத்தாழை விபுலானந்த கல்லூரி வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தனர். 

அங்கு இடம்பெற்ற சங்காபிஷேக பூசை நிகழ்வினை தொடர்ந்து சுவாமிக்கு விசேட பாலாபிசேகம் நடைபெற்றது.

​சங்காபிஷேகமும் விசேட பூஜைகளும் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.ப.கண்ணன் குருக்கள் அவர்களின் தலைமையில், வேதங்கள் , மந்திரங்கள் முழங்க சகஸ்ரநாம அர்ச்சனைகள் செய்யப்பட்டன

 

 ந குகதர்சன்