மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழக கூடைப்பந்தாட்ட அணி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

 

















காரைதீவு கூடைப்பந்தாட்டக்கழகத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில், அருளானந்தம் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, அஸ்கோ அனுசரணையில் ,காரைதீவு விபுலானந்தா மைதானத்தின் கூடைப்பந்தாட்ட திடலில் நேற்று முன்தினம் (15) மாலை சிறப்பாக இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு நிலை இலங்கை வங்கி முகாமையாளர் அ.மகேந்திரராஜா, முதன்மை அதிதிகளாக காரைதீவு பிரதேசசபை தவிசாளர் சு.பாஸ்கரன் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் மற்றும் கௌரவ சிறப்பு அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த மண் அணிக்கும், அவரால் தோற்றுவிக்கப்பட்ட கல்லடி சிவானந்த வித்தியாலயத்தின் அணிக்கும் இடையே வருடாந்தம் நடைபெற்றுவரும் இக் கூடைப்பந்தாட்ட போட்டி , இம்முறை மூன்றாவது வருடமாக காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்துடன் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகம் மோதியது.

இப்போட்டியில் 43 – 37 என்ற ரீதியில் கல்லடி சிவானந்தா கூடைப்பந்தாட்ட அணி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

அதிதிகளால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.