இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கை.

 


இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

மேல், சபரகமுவா, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், மேலும் மொனராகலை மாவட்டம் ஆகிய பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பம் எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த எச்சரிக்கை தாமதமாக வெளியிடப்பட்டதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

முன்கூட்டியே அறிவித்திருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சுகாதார நிபுணர்கள், வெப்பத்தால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்பச் சோர்வை தவிர்க்க அதிகளவில் தண்ணீர் குடிக்கவும், நேரடி வெயிலை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களிலும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.