கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பெண்களுக்கான வர்த்தக பொருளாதார சம்மேளனம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு














 


 மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாரத்தினை மேம்படுத்து முகமாக அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாகவும்

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் இருக்கக்கூடிய சகல பெண்கள் அமைப்பினரையும் ஒன்றிணைக்கும் மாவட்ட பெண்கள்  வர்த்தக சம்மேளனம்  மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

 இவ் அமைப்பின் இணை தலைவிகளான திருமதி எட்வேட் கேசாயினி மற்றும் சுரேஷ் வாசுகி அவர்களின் தலைமையில்  
இடம்பெற்ற  நிகழ்விற்கு பிரதம அதிதியாக 

 சுற்றுலா அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தலைவி வனிதா செல்லப்பெருமாள் கலந்துகொண்டு அமைப்பின் உத்தியோபூர்வ இணையதள செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்ததுடன்

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட பெண்கள் வர்த்தக பொருளாதார சம்மேளபிரதிநிதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள்  கண்காட்சி நிகழ்வையும் பார்வையிட்டார்

 இந்நிகழ்விற்கு சுற்றுலா அமைச்சின் உயர் அதிகாரிகள் மாவட்ட பிரதேச செயலக உயர் அதிகாரிகள் மாவட்ட பெண்கள் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் இவ்  நிகழ்வில் கலந்து கொண்டனர்

 

 வரதன்