"பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது எமது நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையிலும் வழிகாட்டலிலும் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு "பெண்களும் சுகாதாரமும்" எனும் தொனிப் பொருளில் Family Planning Association அனுசரனையுடன் நடமாடும் மருத்துவ முகாம் சின்ன ஊறணி கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களின் தலைமையில் 2026.03.05 அன்று இடம் பெற்றது.
இன் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சுபா சதாகரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் சுகாதார வைத்திய அதிகாரி திரு. உதயகுமார் அவர்களும், வைத்திய அதிகாரி திருமதி. கமலேஸ்வரி நவலோஜிதன் அவர்களும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர், கிராம அபிவிருத்தி பிரிவு, சிறுவர் பெண்கள் பிரிவு மற்றும் சமூக சேவை பிரிவு உத்யோத்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் சின்ன ஊறணி கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்துடன் இம் மருத்துவ முகாமின் ஊடாக நூறிற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.






























