காரைதீவில் தம்பிலுவில் எதிரொளி வெற்றிவாகை! மூத்தவீரர் லண்டன் விக்னேஸ்வரராஜா பிரதம அதிதி .

 















காரைதீவில் நேற்று நடைபெற்ற  “KSC Champion Trophy 2026” கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், தம்பிலுவில் எதிரொளி விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 32 கிரிக்கெட் கழகங்கள் பங்கு பற்றின. அணிக்கு 11 பேர் கொண்ட 08 ஓவர்கள் கொண்ட இச் சுற்றுத் தொடரில் இறுதிப் போட்டியில் தம்பிலுவில் எதிரொளி விளையாட்டு கழகமும் அக்கரைப்பற்று யங்பிளவர்ஸ் அணியும் மோதின.

இறுதியில் தம்பிலுவில் எதிரொளி விளையாட்டு கழகம் வெற்றி ஈட்டியது. அவர்களுக்கு வெற்றி கிண்ணமும் 40 ஆயிரம் ரூபாய் பணப் பரிசும் பிரதம அதிதி விக்னேஸ்வரராஜா வழங்கி வைத்தார்.

றன்னஸ் அப் இரண்டாம் இடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று யங்பிளவர்ஸ் விளையாட்டு கழகத்திற்கு கழக போஷகர் வி.ரி.சகாதேவராஜா வெற்றி கிண்ணத்தையும் 20 ஆயிரம் ரூபாய் பணப் பரிசையும் வழங்கி வைத்தார்.

 பிரதம அதிதியாக லண்டனில் வாழும் காரைதீவு விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்தவீரரும் முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரியுமான சபாபதி விக்னேஸ்வரராஜா கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதிகளாக கழகப் போசகர்களான 
உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , ஓய்வு நிலை உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, சி.நந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சுற்றுப் போட்டிக்கான அனுசரணையை மணிச்சந்திரன் தக்ஸ்விகன் மற்றும் சகாதேவராஜா யனோஜ் ஆகியோர் வழங்கினர்.

காரைதீவு விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த இந்த “KSC Champion Trophy 2026”  கிரிக்கெட் போட்டி  நேற்று முன்தினம் (14.03.2026)  காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் இடம்பெற்றது.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

( வி.ரி.சகாதேவராஜா)