ஆரையம்பதியில் தூய பசும்பால் நுகர்தலை ஊக்குவிக்கும் திட்டம் இன்று இடம்பெற்றது.










CHIEF EDITOR

கிழக்கு மாகாணத்தின் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் இவ்வாண்டின் பி.எஸ்.சி (PSC) திட்ட நிகழ்ச்சியின்கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகமைய விலங்குகளிடமிருந்து கிடைக்கபெறும் உணவுகளான இறைச்சி, பால், முட்டை என்பவற்றை பொது மக்கள் உண்ணுதலை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன் நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக பொது மக்கள்  தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும்  நிகழ்வு  கால்நடை வைத்திய அதிகாரி 
பிரிவு ஆரையம்பதி ஐந்தாம் கட்டை சந்தியில் இன்று   இடம்பெற்றது. 

ஆரையம்பதி  அரச கால்நடை வைத்திய அதிகாரி  சதீஷ்காந்த்  ஜதுஷ்னா தலமையில் இன்று ஆரையம்பதி ஐந்தாம் கட்டை சந்தியில்  தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும் திட்டம் இடம்பெற்றது.

  ஆரையம்பதி  சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக பிரிவு சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.புலேந்திரகுமார் மற்றும் ஆரையம்பதி அரசு கால்நடை வைத்தியர் காரியாலய உத்தியோகத்தர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.