ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பாதுகாப்பு சுகாதாரத்தினை வலுப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுப்பு












மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை வலுப்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை மேலும் வினைத் திறனுடையதாக முன்னெடுப்பதற்கு

 அவர்களுக்கு வேண்டிய சேவைகளை அவர்களது காலடியில் வழங்கும் நோக்குடன் இந்த விழிப்புணர்வு செயற்திட்டமானது இன்று மட்டக்களப்பு கல்லடியில் இடம் பெற்ற தொழில் முனைவோர் கண்காட்சியில் முதல் தடவையாக  மாவட்ட போலீசாரினால் அறிமுகப்படுத்தப்பட்டது

 நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் எஸ் பிரணவன் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்

 இதன் போது பெண்கள் போதைப் பொருள் பாவணையால் எதிர் நோக்கும் குடும்ப வன்முறைகள் தொழில் பாதுகாப்பு  மற்றும் சுகாதார சம்பந்தமான பாலியல்  பிரச்சனைகள் இள வயது திருமணம் பாதுகாப்பு  அற்ற கர்ப்பம் தரித்தல் எய்ட்ஸ் நோய் சம்பந்தமான விழிப்புணர்வு  செயல் திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது போன்ற விளக்கங்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டது

 மட்டு மாநகர சபையின் பிரதி முதல்வர்  பெண் போலீஸ் உயர் அதிகாரிகள் மாவட்ட  பிராந்திய சுகாதார  சேவைகள் பணிமனையின் வைத்தியர்கள் மாவட்ட செயலக  உயர் அதிகாரிகள் மும்மத தலைவர்கள் பெண் தொழில் முனைவோர் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

 

 வரதன்