சர்வதேச சந்தையில்
ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (07)
தங்கத்தின் விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக
வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
இதன் நேரடித் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்துள்ளது.
இதன் நேரடித் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்துள்ளது.





