இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப்
93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு கோமாரி வைத்தியசாலைக்கு
மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.
அம்பாறை
மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரி வைத்தியசாலைக்கு
பெறுமதிமிக்க மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்
கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
வைத்திய
சாலை பொறுப்பு வைத்தியர் மருத்துவர் ஆகில் அகமட் ஷரிபுதீன், மருத்துவர்
ஏஏ.ஷரிபுதீன் மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களிடம்
கையளிக்கப்பட்டது.
இது
எமது வைத்தியசாலைக்கு கிடைத்த பெரும் உதவி. அதற்காக நன்றி செலுத்துகிறேன்
என சமூக செயற்பாட்டாளரும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான த.சுபோதரன்
தெரிவித்தார்
வி.ரி.சகாதேவராஜா










