நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நேற்று (6) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 4,330 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 32 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,742 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





